சூழ்ச்சி செய்த பசில் - ரணிலிடம் ஓடிச் சென்ற எம்.பிக்கள்
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் தேர்தலில் பசில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவுக்காக சூழ்ச்சி செய்கின்றார் என்பது நிரூபணமானதையடுத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அமைச்சர் பதவியை பெற்று அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முடியாது என அறிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் முன்னதாக அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்தநிலையில் பிரதி சபாநாயகர் பதவிக்கான எதிர்க்கட்சி வேட்பாளரை தெரிவு செய்ய இன்று இணக்கம் காணப்பட்ட போதிலும் கடைசி நேரத்தில் பசில் ராஜபக்ச தலையிட்டு எதிர்க்கட்சி வேட்பாளரை தெரிவு செய்யும் முயற்சியை நிறுத்தியதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று காலை விக்ரமசிங்கவைச் சந்தித்த இந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இவ்வாறான நிலையில் அரசாங்க அமைச்சுக்களை பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
