றீ(ச்)ஷாவில் காய்த்துக் குலுங்கும் மாம்பழங்கள்
கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தமான பசுமை பண்ணையாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) காணப்படுகின்றது.
இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்பொழுது இலங்கையின் (Sri Lanka) பொருளாதார நெருக்கடியான சூழலில் அநேகமாகனோர் தங்களுக்கு தேவையான பழங்கள் உள்ளிட்ட காய்கறிகளை தாங்களாகவே பயிரிட்டு கொள்ள முயற்சிக்கும் நிலையில் இது போன்ற இயற்கை முறை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இவ்வாறான சூழலில் றீ(ச்)ஷா போன்ற இயற்கை பண்ணைகளின் ஊடாக அது தொடர்பில் மக்கள் அறிந்துக்கொள்வதுடன் அனுபவத்தையும் பெற்று கொள்ள முடிகின்றது.
அந்தவகையில், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ( ReeCha Organic Farm) தற்பொழுது இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட மாம்பழங்கள் காய்க்க தொடங்கியுள்ளன.
கிட்டத்தட்ட 1500 டொம் ஜெசி (Tom JC) வகை மாமரங்கள் நடப்பட்டு இயற்கையான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதால் அதிகளவான விளைச்சளைப் பெற முடிகிறது.
குறிப்பாக மரங்கள் அனைத்தும் எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமல் இயற்கை உரங்கள் மூலம் பராமரிக்கப் படுவதால் மாம்பழங்கள் இயற்கையான சுவையுடன் காணப்படுகின்றன.
மேலும், அவைகளின் நிறையும் 600 கிராம்களுக்கு குறையாமல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் கீழுள்ள காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |