பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர்

Batticaloa ITAK General Election 2024
By Sathangani Oct 09, 2024 08:49 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலும், வட்டாரத் தலைமை பதவியிலுமிருந்தும் இன்று முதல் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கட்சியின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் (M. Udayakumar) தெரிவித்துள்ளார்.

அவருடைய விலகல் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பில் வசிக்கும் மாணிக்கம் உதயகுமார் ஆகிய நான் தமிழரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினராவேன். எனது பெற்றோரும், உற்றார், உறவினர்களும் இக்கட்சியின் ஆதரவாளர்களும், பற்றாளர்களுமே.

அவுஸ்திரேலியாவிற்கு வெறுங்கையுடன் சென்று கோடீஸ்வரனான இலங்கை இளைஞன்

அவுஸ்திரேலியாவிற்கு வெறுங்கையுடன் சென்று கோடீஸ்வரனான இலங்கை இளைஞன்

அரச அதிபர் பதவி

நான் 2020ஆம் ஆண்டு பிள்ளையான், வியாழேந்திரன் போன்ற அரசியல்வாதிகளினால் பழிவாங்கலுக்குட்பட்ட போது நான் அப்போது வகித்த மட்டக்களப்பு அரச அதிபர் பதவியை தூக்கியெறிந்து தமிழரசுக் கட்சியின் முழுநேர அங்கத்தவனாக செயற்பட்டவன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

அத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட எனக்கு எமது தமிழ் மக்கள் 21,999 விருப்பு வாக்குகளை வழங்கியதன் மூலம் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு பிரதிநிதித்துவத்தைப் பெற பெரும் பங்காற்றியிருந்தனர்.

பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் | Manikam Udayakumar Resigns From All Posts Of Itak

எனினும் இதனை இன்று ஒருசிலர் தமது தனிப்பட்ட வெற்றியாகக் கருதி தன்னிச்சையாக செயற்படுகின்றனர். எனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்களது கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட 2024/9/29ம் திகதிய கடிதத்திற்கமைய எனது விருப்பினைத் தெரிவித்திருந்தேன்.

இருந்த போதும் மாவட்டத்தில் இதுவரை, தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் என்னைத் “தெரிவுக் குழு” தெரிவு செய்யாமை எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசுக்கட்சியின் தகுதியுடைய வேட்பாளர் தானாம் இந்த அம்மணி!

தமிழரசுக்கட்சியின் தகுதியுடைய வேட்பாளர் தானாம் இந்த அம்மணி!

சாணக்கியனின் கை பொம்மை

மேற்படி தெரிவுக் குழுவில் அங்கத்துவம் வகிப்பவர்களது தெரிவும் ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை. ஓர், இருவரது தெரிவுக்கும், தேவைக்கும் ஏற்ற வகையிலேயே இத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது பலரது கருத்தாகும் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய தேவை எழுகிறது.

தெரிவுக் குழுவில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களே அதிகமாக இடம்பெற்றிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அங்கத்தவர்களில் நால்வரில் இருவர் வேட்பாளர்களாவர். அத்துடன் அவர்கள் அனைவரும் சாணக்கியனவர்களின் கை பொம்மைகளே.

பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் | Manikam Udayakumar Resigns From All Posts Of Itak

மேலும் மாவட்டத்தில் வேட்பாளர்களைத் தெரிவு செய்தல் தொடர்பாக எந்த ஒரு மட்டத்திலும் கலந்துரையாடப்படவோ அல்லது அறிவிக்கவோ இல்லை. சாணக்கியன், சரவணபவன் ஆகியோர் தமக்கு வெற்றிக்கு சாதகமான வகையிலேயே வேட்பாளர்களை மாவட்ட மட்டத்தில் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாகவும், தெரிவுக் குழுவினை ஸ்தாபிக்கும் போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை குழுவில் உள்ளடக்க வேண்டாம் எனவும் தெரிவுக் குழுவுக்கு பக்கச்சார்பற்ற, நேர்மையான அங்கத்தவர்களை இணக்குமாறு தங்களை தங்களது இல்லத்தில் 25/9/2024 அன்று சந்தித்தபோது வலியுறுத்தியிருந்தோம். எனினும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவ விவகாரம் இழுபறியில்...! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவ விவகாரம் இழுபறியில்...! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

கட்சியிலிருந்து விலகுதல் 

வேட்பாளர் தெரிவின் போதும் அதன் தலைவர்/செயலாளர் ஆகியோரை பலமுறை தொடர்பு கொள்ள முற்பட்டபோதும் அவை கைகூடவில்லை என்பதனையும் இருமுறை தலைவர் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக இவ்விடயத்தை அறிவித்திருந்தேன் என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன்.

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்ட கட்சியின் தலைமையினாலும் சில உறுப்பினர்களாலும் நானும் எனது ஆதரவாளர்களும் பலமுறை புறக்கணிக்கப்பட்டு திட்டமிடப்பட்டு அவமதிக்கப்பட்டிருப்பதனையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் | Manikam Udayakumar Resigns From All Posts Of Itak

அன்று தீர்க்கதரிசனத்துடன் தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்ட எமது தமிழரசுக் கட்சி என்ற புனித இயக்கமானது இன்று நயவஞ்சகர்கள் சிலரின் கூடாரமாக மாறியுள்ளமை கவலையளிக்கிறது.

கட்சியின் கொள்கைகளை மதிக்கின்ற எமது தமிழ் மக்கள், தொண்டர்கள், ஆதரவாளர்களை இக்கூட்டத்தினருடன் இணைந்து பயணித்து ஏமாற்ற இனிமேலும் எனது மனம் இடம் தராமையினால், கட்சியின் உறுப்புரிமையிலும், வட்டாரத் தலைமை பதவியிலுமிருந்தும் இன்று முதல் ஒதுங்கிக்கொள்ள தீர்மானித்துள்ளமையினைக் கவலையுடன் அறியத்தருகிறேன்.

இதுவரை காலமும் தங்களால் வழங்கப்பட்ட ஆதரவையும், அன்பையும் பெரிதாக மதிக்கிறேன்.“ என குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025