தமிழர் பகுதியில் இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்
மன்னாரில்(Mannar) சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த இரண்டு பேக்கரிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக மன்னார் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் குறித்த வெதுப்பகங்கள் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டு 12 குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார அறிவிப்புக்கள்
இருப்பினும், குறித்த வெதுப்பகங்கள் பொதுச் சுகாதார அறிவிப்புக்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் நீதிமன்ற உத்தரவுடன் நேற்றைய தினம்(07) வெதுப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சீல் வைக்கப்பட்ட மன்னார் சிறீ பேக்கரி மற்றும் வெலிகம பேக்கரி ஆகிய இரண்டு வெதுப்பகங்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை மூடுமாறும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சுட்டிக்காட்டப்பட்ட 12 சுகாதார பிரச்சினைகளையும் நிவர்தி செய்யும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி மறுக்கப்படுவதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதே போன்று மன்னார் மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வரும் உணவங்கள் தொடர்பிலும் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 14 மணி நேரம் முன்