நீரில் மிதந்து வந்த இளம் பெண்ணின் சடலம்!
மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இனம் காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப் பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம்பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்கவில்லையெனத் தெரிவிக்க்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இன்றைய தினம் கரை ஒதுங்கிய சடலம் அப்பெண்னுடையதாக இருக்கலாம் என காவல்துறையினரால் சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.




