மத்திய அரசின் கீழ் வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை : அதிகாரத்தை பறிப்பதாக சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

Mannar Hospitals in Sri Lanka Pathmanathan Sathiyalingam
By Sumithiran May 29, 2025 11:29 AM GMT
Report

மாகாணசபையின் நிர்வாகத்தினகீழ் இயங்கிவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதானது மாகாண சபையின் அதிகாரத்தை மத்திய அரசுக்கு மீள கையளிப்பதாக அமையுமென தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் (Sathiyalingam)குற்றஞ்சாட்டியுள்ளார். 

நேற்று (28.05) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இவ்வாறான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முதலாவது அரசியல் யாப்பு ரீதியான தீர்வே மாகாண சபை முறைமை

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப்போராட்டத்திற்கு கிடைத்த முதலாவது அரசியல் யாப்பு ரீதியான தீர்வே மாகாண சபை முறைமையாகும். தமிழ் மக்களுக்கான இறுதித்தீர்வாக மாகாண சபை முறைமை அமையாதுவிடினும் ஓரளவுக்கேனும் தம்மைத்தாமே ஆளும் அதிகாரம் மாகாணசபை சட்டத்தில் உள்ளது.

மத்திய அரசின் கீழ் வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை : அதிகாரத்தை பறிப்பதாக சத்தியலிங்கம் குற்றச்சாட்டு | Mannar District Hospital Under Central Goverment

மாகாண சபையிடம் மாகாண சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கான போதுமான நிதி வளம் இல்லையென்பதால் மத்திய அரசின்கீழ் கொண்டு செல்வதாக காரணம் முன்வைக்கப்படுகின்றது.

மாகாணசபை சுயமாக இயங்கக்கூடியவகையில் அதனை பலப்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். இதுவரை மாகாணத்திற்கான நிதியை திரட்டக்கூடிய வகையிலான எந்தவிதமான விசேட திட்டங்களையும் மத்தியில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள் செய்யவில்லை.

மாறாக வெளிநாட்டு முதலீட்டாளர்களைக்கொண்டு மாகாணத்திற்கான அந்நிய செலாவணியை ஈட்டக்கூடியவகையிலான திட்டங்கள் வகுக்கப்பட்டபோதிலும் அதனை நடைமுறைப்படுத்தவதற்கு மத்திய அரசு மறைமுகமாக பலதடைகளை போட்டது. 

பயங்கரவாத தடை சட்டத்தை உடனே நீக்குங்கள் : நீதியமைச்சருக்கு பறந்தது கடிதம்

பயங்கரவாத தடை சட்டத்தை உடனே நீக்குங்கள் : நீதியமைச்சருக்கு பறந்தது கடிதம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய வளப்பற்றாக்குறை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய வளப்பற்றாக்குறை உள்ளது என்பது மறுக்கமுடியாது உண்மையாகும். ஆனாலும் அதனை சீர்செய்வதற்காக வைத்தியசாலை நிர்வாகத்தை மத்திய அரசின்கீழ் கொண்டுவருதென்பது தீர்வாக அமையாது.

மத்திய அரசின் கீழ் வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை : அதிகாரத்தை பறிப்பதாக சத்தியலிங்கம் குற்றச்சாட்டு | Mannar District Hospital Under Central Goverment

13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பாக சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகள் மாகாண சபையின் நேரடி நிர்வாகத்தின்கீழ் காணப்படுகின்றன.

ஏற்கனவே தேசியபாடசாலைகள் என்ற போர்வையில் மாகாண கல்வி அமைச்சின்கீழ் இயங்கிவந்த முன்னணிப்பாடசாலைகள் மத்திய அரசின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் ஆபத்தினை அறியாதவர்களாய் எம்மவர்களும் துணையேபோயுள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.  

மாகாண வைத்தியசாலைகள் மத்திய அரசின்கீழ் கொண்டுவரப்பட்டாலும் சுகாதார துறைக்கான அபிவிருத்திக்கு பெரும்பாலும் வெளிநாட்டு நிதியே பயன்படுத்தப்படுகின்றது.

யாழில் கிராம சேவையாளர் அதிரடியாக கைது!

யாழில் கிராம சேவையாளர் அதிரடியாக கைது!

சுகாதாரதுறைக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள்

சுகாதாரத்துறையை பொறுத்துவரை பன்னாட்டு நிதிவழங்கும் நிறுவனங்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, உலகவங்கி என்பன தொடர்ச்சியாக நிதிவழங்கிவருகின்றன. மத்திய அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் நிதியை மாகாண அமைச்சினூடாக வழங்குவதன்மூலம் மாகாண சுகாதார துறையை அபிவிருத்திசெய்யமுடியும்.

மத்திய அரசின் கீழ் வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை : அதிகாரத்தை பறிப்பதாக சத்தியலிங்கம் குற்றச்சாட்டு | Mannar District Hospital Under Central Goverment

  கடந்த காலங்களில் மாகாண சுகாதார அமைச்சராக நான் இருந்தபோது மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் நெதர்லாந்து அரசாங்கத்தின் பாரிய நிதிபங்களிப்புடனான சுகாதார அபிவிருத்தி திட்டமொன்றினை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தோம்.

ஆகவே மாகாண சுகாதார துறையை அபிவிருத்திசெய்வதற்கு அதனை மத்திய அரசாங்கத்தின்கீழ் கொண்டுவருவது ஒருபோதும் தீர்வாக அமையாது. மாறாக இருக்கும் அதிகாரங்களையும் மத்திய அரசாங்கம் கையகப்படுத்தவதற்கு நாமே வாய்ப்பினை வழங்கியதாக அமைந்துவிடும். கடந்த அரசாங்கங்கள் செய்த தவறை இந்த அரசாங்கமும் தொடர்கின்றதாக என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்றார்.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, சுதுமலை, Pickering, Canada

23 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், மீசாலை

13 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Markham, Canada

23 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நந்தாவில், கொக்குவில், Montreal, Canada

23 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024