இறுதி யுத்தத்தில் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு நானாட்டான் பிரதேச சபை அமர்வில் சுடர் ஏற்றி அஞ்சலி!
mannar
mullivaikkal
memorial
nanaddan
By Kalaimathy
இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை நானாட்டான் பிரதேச சபையின் 39 ஆவது அமர்வின் போது சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நானாட்டான் பிரதேச சபையின் 39 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச் செல்வம் பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நானாட்டான பிரதேச சபையின் உறுப்பினர் ஆர்.ஜீவனின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர், சக உறுப்பினர்கள் கலந்து கொண்டு உயிர் நீத்த மக்களுக்கு சுடர் ஏற்றி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சபை அமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்