மன்னாரில் துணிகர கொள்ளைச் சம்பவம்!
police
investigation
robbery
mannar
sri Lanka
By Kalaimathy
மன்னார் நகர் பகுதியில் மீன் சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவு மழை காரணமாக மின்சாரம் சிறிது நேரம் துண்டிக்கப்பட்ட நிலையில் கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு வியாபார நிலையத்தில் வைக்கப்பட்ட ஒரு தொகை பணம் திருடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் SOCO பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.