அநுர தரப்பின் இரட்டைமுகம் மன்னாரில் அம்பலம்: மக்கள் வெளிப்படை
அண்மைய நாட்களாக மன்னார் (Mannar) பிரதேசம் பாரிய பேசுபொருளுக்குரிய பிரதேசமாக மாறியுள்ளது.
தொடர் போராட்டங்கள், அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கைள் மற்றும் பலதரப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி மன்னார் பிரதேசம் அண்கை்காலமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இதில், ஒரு பக்கம் காற்றாளை மின் உற்பத்தி குறித்த சர்ச்சைகள் மற்றும் மற்றொரு பக்கம் கனிம மணல் அகழ்வு பிரச்சினைகள் என அரசுக்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.
இதற்கு ஆதரவாக இளைஞர் சமூதாயத்தினரால் தொடர் போராட்டங்கள் மற்றும் வலுத்த கண்டனங்கள் என மன்னார் மக்கள் ஒன்றுதிரண்டுள்ளமை பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த தொடர் போராட்டங்கள் குறித்தும், மன்னார் பிரதேசத்தின் தற்போதைய நிலை குறித்தும், மன்னார் மாவட்டம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு தொடர்பிலும் மற்றும் மன்னார் மக்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் மன்னார் மக்களே வெளிப்படையாக தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை சுமந்து வருகின்றது ஐபிசி தமிழின் கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
