தீப்பற்றிய கப்பலால் தொடரும் அபாயம்- மற்றுமொரு கடற்கரையில் சிதைவுற்ற நிலையில் ஆமை!
fire
mannar
sri Lanka
x press pealr ship
By Kalaimathy
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை மாலையே உயிரிழந்த ஆமை கரையொது்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்கரை மற்றும் சிலாபத்துறை கடற்கரையில் கரையொதுங்கியது.
மேலும் நீர்கொழும்பு கடற்கரையில் மீன்கள் மற்றும் கடல் ஆமைகள் என்பன கரையொதுங்கியிருந்தன.
இந்த நிலையிலேயே வங்காலை கடற்கரையிலும் ஓடுகள் கடுமையாக சிதைவுற்ற நிலையில் ஆமையின் உடல் கரைஒதுங்கியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்