மன்னார் இளைஞர்களால் தயாரிக்கப்பட்ட 50 கட்டில்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு
நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றிற்கு உள்ளாகும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
அதற்கு இணையாக இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக 10 நாட்களில் 10,000 கட்டில்கள் எனும் செயல் திட்டம் நாடshவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட இளைஞர்களால் தயாரிக்கப்பட்ட 50 கட்டில்கள் மன்னார் பொது வைத்திய சாலைக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது
அந்த வகையில் குறித்த கட்டில்களின் தரம் மற்றும் பயன்பாடு தொடர்பாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் குழுவினர் நேரடியாக கண்காzpத்ததுடன் பொது வைத்திய சாலைக்கு கட்டில்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர்.

