போராட்டக்காரர்களால் விரட்டப்பட்டாரா மனோ கணேசன்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவிற்கு (Lasantha Wickrematunge) நீதி கேட்டு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த மனோ கணேசன் (Mano Ganesan) உள்ளிட்ட சிலரை போராட்டக்காரர்கள் விரட்டியதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவிற்கு நீதி கேட்டு நேற்றைய தினம் (07.02.2025) கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்
குறித்த இடத்திற்கு அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் ஊடகவியலாளர் லோஷன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
இதன்போது, மனோ கணேசன் மற்றும் லோஷன் ஆகியோரை போராட்டத்தில் கலந்துகொள்ள விடாது அங்கிருந்த செயற்பாட்டாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (07.02.2025) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரித்திருந்தார்.
இது தொடர்பாக மனோ கணேசன் தெரிவித்த முழுமையான விடயங்கள் கீழ் உள்ள இணைப்பில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)