இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மனுஷவுக்கு அழைப்பு!
Manusha Nanayakkara
Ranil Wickremesinghe
NPP Government
By Kanooshiya
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (26.09) காலை 9.30 க்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு குறித்த கடிதத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
டுபாயிலிருந்து நேற்று (24.09) இரவு நாட்டை வந்தடைந்த சந்தர்ப்பத்திலேயே அவருக்கு குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக பதவி வகித்த போது இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணி புரிவதற்காக இலங்கை தொழிலாளர்களை அனுப்பியமை தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளில், வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணயக்கார அழைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
