இன்றும் இறந்து கரை ஒதுங்கிய பெருமளவு கடல்வாழ் உயிரினங்கள்
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் தீப்பற்றி எரிந்த எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்திற்கு பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்றையதினமும் 10 ஆமைகள், ஒரு டொல்பின் , கடற்பறவைகள், மற்றும் பெருமளவு மீன்கள் என்பன இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
இந்துருவா, கொஸ்கொட, பயகலா, வட்டுவா மற்றும் தெஹிவளை ஆகிய கடற்கரைகளிலேயே இவை கரை ஒதுங்கியுள்ளன.
இந்த உயிரினங்களின் இறப்புக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது.
මියගිය කැස්බෑවන් 03 දෙනෙකුගේ සිරුරු කොස්ගොඩ වෙරළ තීරයෙන් සහ මියගිය ඩොල්ෆින් මත්යසයෙකුගේ සිරුරක් ඉදුරුව වෙරළ තීරයෙන් අද (06) දහවල් හමුවි ඇත #Galle #lka #SriLanka #XPressPearl pic.twitter.com/xPzX3GzXCP
— Farhaan Nizamdeen (@greatgalle) June 6, 2021