அமைச்சர்கள் பலர் எரிபொருளை பதுக்கி வைத்துள்ளனர்! உண்மையை போட்டுடைத்த ஆளும் கட்சி உறுப்பினர்
SLPP
SriLanka
Fuels
Geetha Samanmalee Kumarasingha
Geetha Kumarasingha
By Chanakyan
சுமார் ஒரு வருடத்துக்குத் தேவையான எரிபொருளை தாம் சேகரித்து வைத்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க (Geetha Kumarasingha) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறைக்குப் பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெந்தர எல்பிட்டியவில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
