ராஜபக்ச அரசில் இருந்த பலர் திலினி பிரியமாலியுடன் தொடர்பு - அம்பலப்படுத்தும் முன்னாள் இராணுவ அதிகாரி
Rajapaksa Family
Money
Thilini Priyamali
By Jaso
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் ராஜபக்ச அரசில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்கள் அவரது நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.
சட்டவிரோதமாக சம்பாதித்த பணம்

சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் இந்த பெண்ணிடம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகள் தொடர்பில் இணைய ஊடகமொனறுக்கு வழங்கிய கலந்துரையாடலில் அவர் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.