ட்ரோன் கமராக்களில் பலர் சிக்கினர்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட விபரம்
Corona
Police
People
Arrest
Ajith Rohana
By Chanakyan
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட 636 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரே நாளில் அதி கூடிய எண்ணிக்கையிலானவர்கள் கைதான நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தளை பகுதியில் சுமார் 206 பேர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 12, 748 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கும் நோக்கில் ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்