ட்ரம்ப் மிரட்டல் : கனடா பிரதமரின் பதிலடி
Donald Trump
United States of America
Canada
Mark Carney
By Sumithiran
சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடியாக காணொளி ஒன்றை கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டார். அதில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் பேசியதாவது:-
கனடாவை கட்டமைப்போம்
வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். கனடியர்கள் தங்கள் பணத்தை உள்நாட்டில் செலவழித்து உள்ளூர் தொழிலாளர்களை ஆதரிக்க ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்