உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வித் துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோர கல்வி அமைச்சு (Ministry of Education) முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி தொடர்பான கொள்கை வகுப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன (Madhura Seneviratne) தெரிவித்தார்.
பிரதமர் வெளியிட்ட கருத்து
இதேவேளை கல்வி மறுசீரமைப்பை அரைகுறையாக படித்து விட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது முறையற்றது என நாடாளுமன்றில் நடைபெற்ற பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவோ அல்லது ஜனநாயகத்துக்கு எதிரானதாகவோ கொண்டு வரப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |