மீண்டும் மொட்டுக் கட்சியில் இணையும் முக்கிய அரசியல் பிரமுகர்கள்!
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தலைவர்கள் குழுவொன்று மீண்டும் அதே கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் குழுவினரே இவ்வாறு மீண்டும் இணையவுள்ளனர்.
அதன்படி, தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சராகப் பதவி வகித்த சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் அதே கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண, கடந்த 22 ஆம் திகதி மீண்டும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்.
இதேவேளை, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் விரைவில் இணைந்து பணியாற்ற தயாராகி வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான மற்றுமொரு பேச்சுவார்த்தை நேற்றைய தினம் (24.01.2026) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், குறித்த கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |