மறுக்காமல் முன்வந்தது ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி! இறுதியானது ஐசிசியின் முடிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அழைப்பைத் தொடர்ந்து, ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பையில் ஸ்கொட்லாந்து பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.
கிரிக்கெட் ஸ்கொட்லாந்து தலைவர் வில்ஃப் வால்ஷ், இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய போட்டிக்கு அணி விருப்பமாகவும் தயாராகவும் உள்ளது என்று அறிவித்துள்ளார்.
ஐசிசி தலைவர் ஜெய் ஷாவிடமிருந்து முன்னதாகவே தனக்கு அழைப்பு வந்ததாகவும், போட்டியில் விளையாட ஸ்கொட்லாந்து அழைக்கப்படுவதை உறுதிப்படுத்தியதாகவும், அணியின் சார்பாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் வால்ஷ் கூறியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் தேர்வு
“இந்த வாய்ப்புக்கு ஐசிசிக்கு நன்றி தெரிவிக்கிறோம், மேலும் வரும் வாரங்களில் இந்தியாவில் உலகின் சிறந்த சில அணிகளுடன் போட்டியிட ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று வால்ஷ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, இட மாற்றங்களைக் கோரி, இந்தியாவில் தனது போட்டிகளை விளையாட மறுத்ததை அடுத்து, ஸ்கொட்லாந்து ரி20 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்பட்டது.
தரவரிசை
பங்களாதேஷ் முன்வைத்த கோரிக்கைகளை ஐசிசி நிராகரித்ததால், தரவரிசையின் அடிப்படையில் அடுத்த தகுதி வாய்ந்த அணியாக ஸ்கொட்லாந்து அழைக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பை பெப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |