மருதங்குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு! தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை

case people sand request maruthankulam
By Vanan Jul 19, 2021 03:12 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் ஐயன்கன்குளம் பொலிசார் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது வேடிக்கை பார்ப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான் கிராம அலுவலர் பிரிவில் காணப்படுகின்ற விவசாய குளமாக மருதங்குளம் காணப்படுகிறது. இந்த குளத்தினுடைய அலைகரை பகுதியிலே பாரியளவில் சட்டவிரோத மணல் அகழ்வு எந்தவிதமான அனுமதிகளும் இன்றி இடம் பெற்று வருகின்றது.

குளத்தின் உடைய நீரேந்து பகுதிக்குள்ளும் அதனோடு அண்டிய ஆற்று படுக்கைகளில் காணப்படுகின்ற மணல்கள் எந்தவிதமான அனுமதிகளும் இன்றி சட்டவிரோதமாக குளத்தின் அலைகரை பகுதியிலேயே குவிக்கப்பட்டு டிப்பர் வாகனங்கள் அங்கு சென்று மணல் ஏற்றிச் செல்கின்ற போதும் பொலிசார் இந்த விடயம் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக இந்த குளத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன திணைக்களத்தினரோ அல்லது பிரதேச செயலக அதிகாரிகளோ கிராம அலுவலரோ தங்களுடைய முறைப்பாடுகளை கேட்டு அந்த விடயங்களை பார்வையிட்டு இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் மக்கள்,

சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டிய பொலிசார் கூட குறித்த பகுதிகளை தாண்டிச் சென்று வனப்பகுதிகளில் மரக் கடத்தல் செயற்பாடுகளை தடுக்கச் சென்ற போதும் இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை நிறுத்துவதற்கான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமையானது பொலிசாரின் உதவியுடன் இந்த செயற்பாடு இடம் பெறுகின்றது என்பதை தமக்கு வெளிப்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்ற செயற்பாடுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்ற வகையிலே, எந்த விதமான ஒரு திணைக்களத்தின் உடைய அனுமதிகளும் இன்றி இவ்வாறு சட்டவிரோதமாக இடம்பெறுகின்ற மணல் அகழ்வை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தினரோ பிரதேச செயலாளரோ கிராம அலுவலரோ அல்லது பொலிசாரோ மிக விரைவாக குறித்த பகுதியில் இடம்பெறும் பாரிய அளவிலான சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி தங்களுடைய விவசாய குளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோருகின்றனர்.

தங்களுடைய கிராமத்தில் மணல் அனுமதி பெற்று மணல் பெற்றுக்கொள்ள எந்த வழியும் இல்லாத போதும், இவ்வாறு சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எவ்வாறு அதிகாரிகள் துணை போகின்றார்கள் என்று கேள்வியெழுப்பும் மக்கள், மிக விரைவில் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோருகின்றனர்.  


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024