வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: பரிதாபமாக உயிரிழந்த மலையக இளைஞன்
Sri Lanka
Malaysia
Hatton
World
By Shalini Balachandran
வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மலேஷியாவிற்கு(Malaysia) பணிக்கு சென்ற மஸ்கெலியா(Maskeliya) பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா புரவுன்ஷீக்(Brownsic) தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த 24 வயதான துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியா சென்றுள்ளார்.
தண்ணீர் போத்தல் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார் அத்தோடு இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்