கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே: நீதிமன்றம் அதிரடி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (diana gamage) தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள (Department of Immigration and Emigration) அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கமைய அவர், தனது கடவுச்சீட்டை நேற்று (18.5.2025) அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
இலங்கையின் குடியுரிமை பெற்றவர் அல்ல
டயானா கமகே இலங்கையின் குடியுரிமை பெற்றவர் அல்ல எனவும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டப்பூர்வமாக தகுதியற்றவர் எனவும் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களை கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
இதற்கமைய, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, கொழும்பு (colombo) பிரதான நீதவான் நீதிமன்றால் டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கடந்த மே மாதம் 9ஆம் திகதி உத்தரவிடப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |