வலுக்கும் போர் பதற்றம் : முக்கிய புள்ளி மசூத் அசாரை வீழ்த்தியதா இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதலில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் (Masood Azhar) கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் நேற்று தாக்கியழித்துள்ளது.
சர்வதேச பயங்கரவாதி
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாத முகாம்களில், பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்னும் பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மற்றும் முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மறைவிடங்கள் ஆகியவை தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவம் மேற்கொண்ட இந்த தாக்குதலின் போது அங்கு இருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேவேளையில், மசூத் அசாரின் சகோதரி உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை மசூத் அசார், 2019 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
