அரியாலையில் மறைக்கப்பட்ட பாரிய மனித புதைக்குழிகள்! சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூல பின்னணி
கிருஷாந்தி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச, அரியாலையில் உள்ள பகுதியில் இரண்டு பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பதாகத் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்ததாகச் செம்மணியில் இடம்பெற்ற போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரியாலையில் இன்று ஆரம்பமாகி செம்மணி மனிதப் புதைகுழி வரை நடைபெற்ற போராட்டத்தின் போது, 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இப்பகுதியில் நிலவிய சம்பவங்கள் குறித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
1996–1997 காலப்பகுதியில் அரியாலைப் பகுதியில் பல இராணுவ முகாம்களும் சித்திரவதைக் கூடங்களும் இயங்கி வந்ததாகவும். அந்த வகையில், அரியாலையில் இரண்டு பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பதாகவும், அவை அகழ்ந்து பார்க்கப்பட வேண்டும் என்றும் கேிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து மொத்தமாக 26 இடங்களை மனிதப் புதைகுழிகளாக அடையாளப்படுத்தியிருந்த விடயத்தை நினைவுகூர்ந்த போராட்டக்காரர்கள் மேலும் பல குற்றச்சாட்டுக்களை தொடரும் காணொளியில் வெளிப்படுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |