ஆளும் தரப்பின் மே தின கூட்டத்தில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
SLPP
Dinesh Gunawardena
Douglas Devananda
Sri Lankan protests
May Day
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள பல தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் மே தினக் கூட்டம் இன்று (மே 1) நுகேகொட ஆனந்த சமரகோன் வெளி அரங்கில் நடைபெற்றது.
அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, விதுர விக்கிரமநாயக்க,டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே உட்பட தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, பலர் அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினத்திற்கான மே தின பேரணிகளை ஏற்பாடு செய்யவில்லை.
இதேவேளை இம்முறை ஆளும் தரப்பின் மேதின கூட்டத்தில் அரச தலைவர் மற்றும் பிரதமர் பங்கேற்கவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி