துடிக்கத் துடிக்க குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுத்த சத்துருக்கொண்டான் இனப்படுகொலை…

Sri Lankan Tamils Batticaloa Sri Lanka
By Theepachelvan Sep 09, 2024 02:06 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

நினைவேந்தல் செயற்பாடுகளை குற்றச் செயல்களாக உள்ளடக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி நினைவேந்தல் உரிமைகளை இலங்கை அரசு மதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை குறித்த அண்மைய அறிக்கை ஒன்றில் வலியுறுத்தப்பட்டது.

நிலைமாறுகால நீதியில் சிறிலங்கா (Sri lanka)  அரசுக்கு இருக்கும் பொறுப்புக்கூறலும் இதில் வலியுறுத்தப்பட்டது.

அறிக்கை வெளிவந்து சில நாட்கள் ஆகின்ற நிலையில் மட்டக்களப்பு (Batticalaoa) சத்துருக்கொண்டான் இனப்படுகொலை குறித்த நினைவுத் தூபியின் பெயர் பலகையை அகற்றியதுடன் நினைவேந்தலில் ஈடுபட்ட மக்களில் ஏழுபேரை பொலீஸ் ஜீப்பில் இழுத்துச் சென்று வாக்குமூலம் பெறப்பட்ட நிகழ்வு இன்றைய நாளில் இடம்பெற்றுள்ளது.

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம்

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம்

1990களில் நடந்த மற்றொரு படுகொலை

1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான். இலங்கை  அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது.

துடிக்கத் துடிக்க குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுத்த சத்துருக்கொண்டான் இனப்படுகொலை… | Massacre Of Women And Kids In Sathyurukondan

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான். ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு அணியிருக்கும்.

ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவச் சீருடை அணிந்த ஒருவர் ஊரில் வந்து மக்களுக்குக் கூறியுள்ளார்.

போகாது விட்டால் பிரச்சினை என நினைத்த மக்கள் இராணுவமுகாமிற்குச் சென்றனர். வயது முதிர்ந்தவர்களை லொறிகளில் ஏற்றிச்சென்றனர். கொண்டு செல்லப்பட்டவர்கள் ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருத்தப்பட்டனர்.

இலங்கையில் சோழராட்சி! வெளிவரும் வரலாற்று உண்மைகள்

இலங்கையில் சோழராட்சி! வெளிவரும் வரலாற்று உண்மைகள்

சிறுவர்களை கொன்று வீசிய கொடூரம்

ஏழு மணியிருக்கும். அங்கிருந்தவர்களை சரிக்கத் தொடங்கியது சிங்கள இராணுவம். அவர்களுடன் ஊர்காவல்படையும் இணைந்துகொண்டனர்.

துடிக்கத் துடிக்க குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுத்த சத்துருக்கொண்டான் இனப்படுகொலை… | Massacre Of Women And Kids In Sathyurukondan

வாளினால் வெட்டினர். கத்தியினால் குத்தினர். துப்பாக்கியினால் சுட்டனர். கிடங்கொன்றில் ரயரை எரித்து கொன்ற அதில் அப்பாவித் தமிழ் மக்களை வீசினர்.

குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எவரும் வேறுபாடற்று அழித்து எரிக்கப்பட்டனர். பிரதேசமே ஓலத்தால் நிரம்பியது. சிறுவர்களின் கைகளை பின்பக்கமாக கட்டினர். பின்னர் அவர்களை கத்தியால் குத்திக் கொன்று வீசினர். நிலவு வெளிச்சம் இருட்டில் கலந்திருந்தது.

வெட்டி வீசப்பட்டவர்களின் குறை உயிருடன் துடிப்பவர்களைத் தேடித் தேடி எந்த இடத்தில் குத்தினால் உயிர் பிரியும் என பார்த்துப் பாரத்துக் குத்திக் கொன்றனர் இலங்கை இராணுவத்தினர்.

47 குழந்தைகள். 85 பெண்கள். 28 முதியவர்கள். 186பேர் காவுகொள்ளப்பட்டனர். வின்சன் டிப்போ தோட்டத்தில் விடிய விடிய எரிந்த நெருப்பை எஞ்சியவர்கள் பார்த்தக்கொண்டிருந்தனர். ஒரு கிராமே கொலை செய்யப்பட்டது. ஒரு பிரதேசமே அழிந்தது.

அவசரமாக கூடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு

அவசரமாக கூடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு

படுகொலையில் தப்பிய ஒற்றைச் சாட்சியம்

எந்த தடயமும் எந்த ஆதாரங்களும் எந்த சாட்சிகளுமற்ற ரீதியில் இந்தப் இனப் படுகொலையை சிங்களப் படைகள் மேற்கொண்டனர். ஆனால் இந்தப் படுகொலையில் சிக்கி காயமுற்ற கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார். அவரே மனித குலம் நடுங்கும்  இந்தப் படுகொலையின் ஒற்றைச் சாட்சியமானார்.

துடிக்கத் துடிக்க குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுத்த சத்துருக்கொண்டான் இனப்படுகொலை… | Massacre Of Women And Kids In Sathyurukondan

வெட்டி வீசப்பட்ட கிருஷ்ணகுமார் இராணுவத்தின் மரணக் குழியில் விழாமல் அதிஸ்டவசமாக வெளியில் விழுந்தார். வெட்டுக்காயங்களுடன் வேலிக் கரையாக வீசப்பட்ட கிருஸ்ணகுமார் மெல்ல மெல்ல தவள்ந்து சென்று ஒரு பற்றையினுள் ஒளிந்துகொண்டார்.

மறுநாள் மதகுரு ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்வியுற்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவரை வைத்தியசாலையிலிருந்து கடத்த முற்பட்டனர்.

குறித்த மதகுரு தனது கடும் பாதுகாக்கில் - இரகசியமாக வைத்து சிகிச்சை அளித்து கிருஷ்ணகுமாரைக் காப்பாற்றினார். சத்துருக்கொண்டான் படுகொலை குறித்து கிருஷ்ணகுமார்  சாட்சியங்களை வழங்கினார்.

விசாரணைக் குழுவின் வேண்டுதல்

கொலை நடைபெற்று சில நாட்கள் வின்சன் தோட்ட இராணுவ முகாமை நெருங்க முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். ஒரு வாரம் கடந்த நிலையிலையே, அந்த இராணுவமுகாமிற்குச் சென்று உங்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே என்று ஊர் மக்கள் கேட்கத் தொடங்கினார்.

துடிக்கத் துடிக்க குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுத்த சத்துருக்கொண்டான் இனப்படுகொலை… | Massacre Of Women And Kids In Sathyurukondan

 இந்த நிலையில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

மனித உரிமை ஆணைக்குழு செஞ்சிலுவை சங்கம் போன்ற இராணுவத்தரப்பிடம் இந்தப் படுகெராலை குறித்து விசாரித்தது. எனினும் இராணுவத்தினர் அவ்வாறு தாம் செய்யவில்லை என்று மறுத்தனர். சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் வெளிவந்த உண்மைகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

இதனை அடுத்து அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு நீதி விசாரணை நடத்துவதாக கூறி இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நிறுவியது.

ஓய்வுபெற்ற நீதிபதியான கே. பாலகிஷ்ணர் தலைமை வகித்த குறித்த விசாரணையின் முடிவில் நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.

பன்னாட்டுச் சூழலில் பேசுபொருள்

இவ் இனப்படுகொலை சம்பவம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கொலம்பிய பல்கலைக்கழகம்  இப் படுகொலை தொடர்பான விடயத்தையும் சாட்சிகளையும் ஆவணப்படுத்தியது.

துடிக்கத் துடிக்க குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுத்த சத்துருக்கொண்டான் இனப்படுகொலை… | Massacre Of Women And Kids In Sathyurukondan

அத்துடன் அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர்களும் திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்த இப் படுகொலை குறித்து ஆராயந்துள்ளனர்.

இந்தப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பப்பட்டபோதும் இலங்கை அரசு எதனையும் செய்துவிடவில்லை. இவ் இனப் படுகொலையின் குற்றவாளிகளாக இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளாக இம்முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கெரத் மற்றும் விஜயநாயக்க மேலும் இதற்கான கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ ஆகியோர் இனம் காணப்பட்டனர்.

எனினும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழிக்க இந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டதா என்ற கேள்வியும் மனித உரிமைவாதிகளால் முன்வைக்கப்பட்டது.

கடந்துவிட்ட 34 ஆண்டுகள்

இலங்கை அரச படைகள் நிகழ்த்தும் எந்தவொரு இனப்படுகொலை நடவடிக்கைக்கும் நீதி கிடைப்பதில்லை என்ற இலங்கையின் அநீதி வரலாற்றில் சத்துருக்கொண்டான் படுகொலையும் அடங்கிற்று.குழந்தைகள் என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல் முதியவர்கள் என்றும் பாராமல் எம் சனங்கள் வெட்டி எரியும் நெருப்பில் வீசப்பட்டமைக்கு இலங்கையில் நீதி மறுக்கப்பட்டது.

துடிக்கத் துடிக்க குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுத்த சத்துருக்கொண்டான் இனப்படுகொலை… | Massacre Of Women And Kids In Sathyurukondan

இவ்வாறு எம் சனம் படுகொலை செய்யப்படுவதே இலங்கை அரசின் நீதியா? இன்றுடன் 34 வருடங்கள் நீதியற்றுக் கடந்துவிட்டன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிகோரிய நமது போராட்டத்தில் சத்துருக்கொண்டான் இனப் படுகொலை தொடர்பிலும் கவனத்தை முன்வைப்போம்.

ஈழத்தின் கிழக்கை, மட்டு மண்ணை, ஈழத்தை, உலகத்தை அதிரப்பண்ணிய இந்தப் படுகொலைகளை தமிழ் இனம் என்றும் மறக்காது.

இன்றும் அந்த மக்கள் தமது நினைவேந்தலை செய்ய முடியாமல் அடக்கப்படுகின்ற நிலைதான் தொடர்கின்றது என்பதே இந்தப் படுகொலையின் நீட்சியாகவும் அநீதியாகவும் தொடர்கின்றது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 September, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்