களுத்துறையில் பாரிய விபத்து: குடும்பஸ்தர் பலி
களுத்துறை வஸ்கடுவ வாடியமன்கட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை காவல்துறையினர் தெரிவித்த்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(04) காலை இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறையிலிருந்து வஸ்கடுவ வாடியமன்கட சந்திக்கு அருகில் வந்த பேருந்தில் முச்சக்கரவண்டி மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பேருந்தின் சாரதி கைது
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சுகத் தயானந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.