பூமிக்கு அருகில் வேகமாக வரும் பல சிறுகோள்கள்! பூமிக்கு ஆபத்தா? நாசா புதிய தகவல்
எதிர்வரும் வாரங்களில் பல சிறுகோள்கள் பூமிக்கு அருகில் கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த சிறுகோள்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து சென்றாலும், அவை பூமியை விட வெகு தொலைவில் உள்ளன.
"வானியல் ரீதியாக, இவை பூமிக்கு அருகில் வருகின்றன. ஆனால் மனித அடிப்படையில், அவை மில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளன.
இதனால் எவரும் பயப்பட வேண்டியதில்லை" என்று தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வகத்தின் பணிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பூமிக்கு மிக நெருக்கான அணுகுமுறைகளில் 238,854 மைல் தொலைவில் பூமியை கடந்து செல்லும் சிறுகோள் 2021-TJ15 என்பது ஆகும்.
2004 UE என்ற சிறுகோள் பூமியிலிருந்து சுமார் 2.6 மில்லியன் மைல் தொலைவில் நவம்பர் 13 ஆம் திகதி பூமியை கடந்து செல்லும்.
இது 1,246 அடி வரை நீலம் கொண்டது. ஏறக்குறைய எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தை ஒத்தது.
இவை தவிர மேலும் பல பாரிய சிறுகோள்கள் எதிர்வரும் வாரங்களில் பூமியை கடந்து செல்லவுள்ளன.
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்