டிசம்பரில் இலங்கைக்கு காத்திருக்கின்றது பாரிய ஆபத்து!
டிசம்பர் மாதமாகும் போது எதிர்பார்க்காத அளவில் பாரியளவில் கொவிட் தொற்றாளர் அதிகரிப்பதற்கான முன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயற்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த வாரத்தில் விடுமுறை தினங்களில் மக்கள் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றாமல் சுற்றுலாக்களுக்கு சென்றமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அதேபோன்று கடற்கரை விருந்துபசாரங்கள், களியாட்டங்களிலும் சுகாதார விதிமுறைகளை மீறி நோய் தொற்று பரவக் கூடிய வகையில் செயற்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
தடுப்பூசி நடவடிக்கைகளால் மரணங்கள் குறைவடைந்தாலும், டிசம்பர் மாதமாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிப்பதற்கு முன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன என்று தெரிவித்தார்.