காட்டு பகுதியில் இடம்பெற்ற பாரிய எரிபொருள் மோசடி அம்பலம் (படங்கள்)
தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் திகம்பத்தஹ பகுதியில் எரிபொருள் பவுசரில் இருந்து எரிபொருள் மோசடி செய்யும் கும்பலை காவல்துறையினர் இன்று கைது செய்ய முடிந்தது.
இரகசிய இடத்தில் பதுங்கியிருப்பதாக வீதியில் பயணித்த பயணி ஒருவர் சீகிரிய காவல்துறைக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
சாரதியும் உதவியாளரும் காட்டு பகுதியில் எரிபொருள் பவுசரை நிறுத்தி 210 லீற்றர் டீசலை வெளியே எடுத்ததாக தகவல் வழங்கியவர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, சிறிய லொறி ஒன்று 210 லீற்றர் டீசல் நிரப்பப்பட்ட பீப்பாய் மற்றும் பல சிறிய கான்களை எடுத்துச் சென்றதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 20 லீற்றர் கொண்ட இரண்டு கான்களையும் மற்றுமொரு 210 லீற்றர் கானையும் காட்டுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் எடுத்துள்ளனர். பௌசரில் இருந்த சாரதி மற்றும் உதவியாளருடன் எரிபொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.