யாழ்ப்பாணம் வலிவடக்கில் பாரிய மண்மோசடி -உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் வறுத்தலைவிளான் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் பாரியளவில் மண் அகழப்பட்டு வெளியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தவிசாளரின் ஏமாற்று வேலை
குறித்த குளமானது கமநலசேவை நிலையத்திற்கு சொந்தமானது. ஆனால் வலிவடக்கு பிரசேபை தவிசாளர் இதற்கு அனுமதி அளித்துள்ளார்.முன்னர் தன்னால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்த அவர், பின்னர் தான் அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பு விடயத்திலும் தான் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்து பின்னர் எட்டு மாதங்களுக்கு பிறகு தானே அதற்குரிய அனுமதியை வழங்கியதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.
அழகுபடுத்தப்பட்ட ஆரியகுளமும் அழிக்கப்பட்ட குளமும்
எனவே அழகுபடுத்தப்பட்ட ஆரியகுளத்தை பார்க்கும் நீங்கள் அழிக்கப்பட்ட இந்த குளத்தையும் வந்து பாருங்கள் என கேட்டுக் கொள்கின்றேன். குறித்த குளத்திலிருந்து 250 இற்கும் மேற்பட்ட டிப்பர் மண் ஏற்றப்பட்டு வெளியில் விற்பனை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வலிவடக்கில் மழைபெய்தால் குளம்போல நிற்கும் பல இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு எல்லாம் இந்த மண்ணை பரப்பாமல் விற்பனைக்கு வழங்கியமை எந்த வகையில் நியாயம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
