ஈரானில் போரை நிறுத்து : லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியாகச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று(07)சனிக்கிழமை பிற்பகல் மில்பாங்கிலிருந்து வோக்ஸ்ஹாலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு 50,000 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ட்ரம்பின் கருத்து வெளிவந்த சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டம்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் எட்டாவது நாளிலும், வரும் நாட்களில் அமெரிக்கா ஈரானை "மிகக் கடுமையாக" தாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய சிறிது நேரத்திலும் இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இது ஈரானிய ஆட்சிக்கு ஆதரவான போராட்டம் அல்ல
பலர் ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பை விமர்சிக்கும் கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
Tens of thousands outside the US Embassy in London… pic.twitter.com/JCCqE6sAFp
— John Rees (@JohnWRees) March 7, 2026
இருப்பினும், இது ஈரானிய ஆட்சிக்கு ஆதரவான போராட்டம் அல்ல என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |