அதிகரிக்கும் இணைய மோசடிகள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் தனிநபர் மீதான இணைய மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளங்கள் வாயிலாக குறித்த மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், பிரமிட் திட்டங்களுக்கு எனக் கூறி மக்களிடம் இருந்து இணைய வெளியில் பணம் கொள்ளையிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய வழியாக பல போட்டிகள் நடப்பதாகவும் அதற்கு வாக்களிக்குமாறும் கோரி நண்பர் கோரிக்கைகளை அனுப்பி மோசடி செய்பவர்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக முகநூல் பக்கத்தில் இருந்து பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பகிர வேண்டாம்
தவிரவும் இவ்வாறு வாக்களிக்க எனக்கூறி நண்பராகும் நபர்கள் வாக்களிக்க என பகிருமாறு கோரும் நான்கு இலக்க குறியீட்டு எண் ஒரு முறை கடவுச்சொல்லினை (OTP) யாருக்கும் பகிர வேண்டாம் என அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ஒரு தனிநபரின் தேசிய அடையாள அட்டை (NIC), இலங்கை கடவுச்சீட்டின் தகவல் பக்கம் மற்றும் ஓட்டுநர் உரிமங்களின் பிரதிகள், அவர்களின் கையொப்பங்கள் உள்ளிட்டவற்றின் தெளிவான நகல்களை தெரியாத நபருக்கு அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இதன் மூலமாகவும் மோசடிகள் நிகழ்வதால் காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போலியான கணக்குகள்
இந்நிலையில் "பாதிக்கப்பட்ட மக்கள் புகார்களைப் பதிவு செய்த போதும், விசாரணையைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஏனென்றால் தனிப்பட்ட அடையாள ஆவணங்களைப் பெற்ற பெரும்பாலான கணக்குகள் போலியானவையாகவும் பல்வேறு நாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும்,"தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் இதுவரை ஏழு இணைய மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், பெப்ரவரியில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |