வெளிநாடொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீ: பாரிய அளவிலான நிலப்பரப்பு தீக்கிரை!
அமெரிக்காவின் (USA) கலிபோர்னியா (California) மாநிலத்தில் ஏற்ப்பட்டுள்ள காட்டுத்தீயினால் மாநிலத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த காட்டுத்தீ பரவலானது, கடந்த புதன்கிழமை (24) முதல் கலிபோர்னியாவிலுள்ள பூங்காவொன்றில் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வனப்பகுதிக்கு தீ வைத்ததால் இந்த நிலை ஏற்ப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
சதுர கிலோமீற்றர்
மணித்தியாலத்திற்கு 20 சதுர கிலோமீற்றர் வேகத்தில் காட்டுத்தீ பரவுவதால் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் சுமார் 5000 ஏக்கர் வனப்பகுதி காட்டுத்தீயினால் அழிவடைவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை நேற்றைய (28) நிலவரப்படி தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4000இற்கும் அதிகமான தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இது கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள ஏழாவது மிகப்பெரிய காட்டுத்தீ என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |