மாத்தறையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை உயிரினம்!
sri lanka
animals
proplr
By Shalini
மாத்தறை பிடபெத்தர, மஹபொதுவில பிரதேசத்தில் தேயிலை மரம் ஒன்றில் இருந்து செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஏ.பீ.கே பிரேமசிறி என்ற நபரினால் குறித்த இரண்டு செம்மஞ்சள் வௌவால்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், அந்துப்பூச்சி போன்ற ஒரு விலங்கினை கண்டேன். பறந்து சென்று தேயிலை மரத்தின் கிளையில் விழுந்தது.
அருகில் சென்று பார்த்தேன். அப்பொழுதுதான் அது வௌவால் என்று தெரிந்தது. . முதலில் ஒரு வௌவாளைதான் பார்த்தேன்.
பின்னர்தான் மற்றைய வௌவாலை கண்டேன். என்றார். பிரேமசிறியால் குறித்த வௌவால்கள் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து
அரிய வகை விலங்காக கருதி அவற்றை தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்