மட்டக்குளி துப்பாக்கி பிரயோகம்:கஞ்சிபானை இம்ரானின் இரு சகாக்கள் கைது!
மட்டக்குளி ”மிஹிஜய உயன” வீடமைப்பு தொகுதிக்கு அருகில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சந்தேகத்தில் தேடப்பட்ட இருவர் மிஹிஜய செவன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிஹிஜய செவன காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கிராண்ட்பாஸ் மட்டக்குளிய பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணை
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் போது உயிரிழந்த நபருக்கு, பெண் ஒருவர் தொலைபேசி அழைப்பு விடுத்து இவரது குடியிருப்பிலிருந்து அவரை வெளியே அழைக்கச் செய்து காரில் வந்த சிலரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கஞ்சிபானை இம்ரான், செல்வி ஆகியோரின் நெருங்கிய சகா என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |