சிறீதரன் எம்.பி மீதான தாக்குதல்: ஒருபோதும் அனுமதிக்க முடியாது - சுகாஷ் கண்டனம்
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தாக்கப்பட்டமை என்பவற்றை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டில் நேற்று(05.02.2024) இடம்பெற்ற ஊடகமாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டிருக்கின்றார்.
அப்பாவிகளான தங்களது கருத்துக்களை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முயன்ற பல்கலைக்கழக மாணவர்கள் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை காண ஐபிசி தமிழின் காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |