நட்டத்தின் கீழ் இயங்கும் மத்தள விமான நிலையம்: தனியார் மயமாக்க தீர்மானம்!
மத்தள சர்வதேச விமான நிலையத்தை பொது தனியார் கூட்டாண்மை திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா தெரிவித்தார்.
இந்த திட்டம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்அமைச்சர் கூறினார்.
அதன்படி, இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் விமான நிலையத்திற்கான ஏலங்களை அழைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் நிறுவனங்கள்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “மத்தள சர்வதேச விமான நிலையத்துடன் வணிகம் நடத்த மூன்று தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் விமான பழுதுபார்ப்பு, பயிற்சி மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற பல துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளைத் திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தள சர்வதேச விமான நிலையம் அதன் தொடக்கத்தில் 66 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் அதன் வருடாந்திர இழப்பு இரண்டு பில்லியன் ரூபாய் எனவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |