மாவீரர் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு : கிளிநொச்சி நீதிமன்றில் திகதியிடப்பட்ட வழக்கு
மாவீரர் நினைவேந்தல் தடையுத்தரவு தொடர்பான வழக்கு விசாரணை கிளிநொச்சி நீதவானால் எதிர்வரும் 27 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்றையதினம் (24) காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டது.
ஒலிபெருக்கிப் பயன்பாடு மற்றும் துயிலுமில்ல கட்டுமானம் உள்ளிட்ட சில விடயங்களை உள்ளடக்கி தடை உத்தரவினை பெறும் வகையில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம், முழங்காவில், தேராவில் துயிலுமில்லங்கள் மற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலுமில்லங்களில் இவ்வாறு தடை உத்தரவு பெறுவதற்கான விண்ணப்பம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கினை நீதவான் எதிர்வரும், திங்களன்று விசாரணைக்காக திகதியிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் எதிர்த் தரப்பு சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தபோது வழக்கிற்காக முன்னாள் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் என சிலரும் மன்றிற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |