மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா : சப்பரத் திருவிழா இன்று
வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுகின்றது.
இந்த 25 நாட்களில் சப்பரத் திருவிழா, தேர் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன வெகு விமர்சையாக நடைபெறுவது வழமை.
மகோற்சவப் பெருவிழாவின் 23ஆம் நாளான இன்று (10.08.2026) இரவு சப்பரத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
சப்பரத் திருவிழா
இன்று காலை 5மணிக்கு உஷத்கால பூசை ஆரம்பமாகி காலை 10.30 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது.

மாலை நேர பூசைகளைத் தொடர்ந்து இன்று இரவு மாவை கந்தன் (முருகப்பெருமான்) அழகாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.
24 ஆம் நாளான நாளை (11.08.2026) செவ்வாய்க்கிழமை மாவைக் கந்தனின் தேர் திருவிழா இடம்பெறவுள்ளது.
தேர் திருவிழா
இரதோற்சவப் பெருவிழாவான நாளை அதிகாலை 2 மணிக்கு உஷத்கால பூசையைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் பவனி ஆரம்பமாகும்.

25 ஆம் நாளான நாளை மறுதினம் (12.08.2026) புதன்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.
தீர்த்தத் திருவிழா
ஆடி அமாவாசை நாளான அன்றைய தினத்தில் காலை 06.30 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து 13.08.2026 (வியாழக்கிழமை) மாலை 04.30 மணிக்கு மாம்பழத் திருவிழாவும், 14.08.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு காங்கேசன்துறையில் கப்பல் திருவிழாவும், 15.08.2026 (சனிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |