முழங்காவிலில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்
புதிய இணைப்பு
கிளிநொச்சி - முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய (27) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் முகமாக, முழங்காவில் துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் கண்ணீர் மல்க தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
பிரதான சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது, பூநகரி மற்றும் கிளிநொச்சியின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் தொடர்ந்து துயிலும் இல்லத்திற்கு திரண்டனர்.

முதலாம் இணைப்பு
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் உள்ள முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, நுழைவாயில் அலங்காரங்கள மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பொதுச் சுடர், நினைவுச் சுடர்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

