புத்தர் சிலையை சேதமாக்கிய நபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
arrest
police
mawanella
By Vasanth
கேகாலை மாவனெல்லை பொலிஸ் பிரிவின் ஹிகுல பிரதேசத்தில், கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை சேதப்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அடிப்படைவாதமோ அல்லது பயங்கரவாத செயலோ அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கேகாலை- ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான போதைப் பொருளுக்கு அடிமையான சிங்களவரே இந்த செயலை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த நபர், விகாரைகள் மற்றும் வேறு வணக்கஸ்தலங்களில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி