டெல்லி கார் வெடி விபத்து எதிரொலி: தீவிரப்படுத்தப்பட்டுள்ள சோதனைகள்!
இந்திய தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம்
அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் உலகப்பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா ஆகிய இரண்டும் வெளி மாநிலங்களை சேர்ந்த அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதி என்பதால் இராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, இராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வான் வழியாகவும் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



