மாப்பிள்ளை நாம்பன்மீது துப்பாக்கிசூடு : முறைப்பாட்டை பதிவு செய்ய வாழைச்சேனை காவல்துறையினர் மறுப்பு
இன்று 10-ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும் இன்றைய தினம் மயிலத்தமடு மாதவனை பகுதியில் உள்ள மாதவணையில் கால்நடை பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலனின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மாப்பிள்ளை நாம்பன் அத்துமீறிய குடியேற்ற வாசிகளினால் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது.
நேற்றய தினமும்(09) அவரது கால்நடைகள் சுருக்கிடப்பட்டு கொலை செய்து இறைச்சிக்கு எடுத்து சென்றுள்ளனர்.
முறைப்பாடு
குறித்த சம்பவம் தொடர்பாக வட வாழைச்சேனை காவல்துறை சென்று தன்னுடைய முறைப்பாட்டை பதிவு செய்ய சென்றபோதும் வாழைச்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி முறைப்பாட்டை பதிவு செய்ய முடியாது எனவும் உங்களுடைய மாடுகள் தான் அவர்களின் பயிரை அழிப்பதாகவும் கூறி முறைப்பாட்டை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளார்.

இன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயம் அடைந்துள்ள அந்த மாப்பிள்ளை நாம்பன்மாட்டின் முறைப்பாடை எப்படி பதிவு செய்வது தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் நிமலன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |