உண்மையை ஏற்றுக்கொண்டார் மணிவண்ணன்!
யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் கலாசார மண்டபத்தை பாராமரிப்பதில் யாழ் மாநரக சபை தவறியுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதனால் நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகார குழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடும், சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் யாழ் மாநகர சபை ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வரும், சைவ சமய விவகார குழுவின் தலைவருமான வி.மணிவண்ணன் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கலந்து கொண்டார்.
ஆன்மீகத் தலைவர்களின் ஆசியுரையோடு ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் நல்லைக்குமரன் நூல் வெளியிடப்பட்டதுடன் இந்த வருடத்துக்கான யாழ் விருது சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவர் திரு.ஆ.ரவீந்திரனுக்கு வழங்கி வைக்கப்பட்டது.