எம்பாப்பேவின் அற்புத கோல்: படுதோல்வியடைந்த பிஎஸ்ஜி
பிரான்சில் இடம்பெற்ற லீக் 1 தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-3 என்ற கோல் கணக்கில் நீஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடந்த லீக் 1 தொடரில் PSG - நீஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் நீஸ் அணியின் டெர்ம் மொபி அபாரமாக கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து பதிலடியாக PSG நட்சத்திரம் எம்பாப்பே புயல்வேகத்தில் கோல் அடித்தார்.
சோகத்தில் ரசிகர்கள்
இதன்மூலம் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. அதன் பின்னர் நடந்த இரண்டாம் பாதியில் நீஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது.
அந்த அணியின் லபோர்டே 53வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்து 68வது நிமிடத்தில் மற்றொரு வீரரான மொபி தனது இரண்டாவது கோலை அடித்தார்.
பின்னர் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் எம்பாப்பே அற்புதமாக கோல் அடித்தார்.

ஆனால் மேற்கொண்டு PSG அணியால் கோல் அடிக்க முடியாததால், நீஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் PSGயை வீழ்த்தியது. பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் தோல்வி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
அத்துடன் எம்பாப்பே இரு கோல்கள் அடித்தும் தோல்வியடைந்ததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
