சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Switzerland
World
By Laksi
சுவிட்சர்லாந்தில் (Switzerland) மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நோய்த்தொற்றானது இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 87 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணல்வாரி நோய்த்தொற்றை வெளிநாடுகளுக்குச் சென்ற சுவிஸ் நாட்டவர்கள், அங்கிருந்து நாட்டுக்குள் கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் நோய்த்தொற்று
இதேவேளை, உலக நாடுகள் பலவற்றில் மணல்வாரி தொற்று இந்த ஆண்டில் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டுகளில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் ஐந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்