நஞ்சற்ற உணவு உற்பத்தி என்ற பெயரில் நஞ்சுள்ள உணவுகளை உற்பத்தி செய்யும் அரசாங்கம்!(காணொளி)
தமிழ்த் தேசியத்தில் இருக்கின்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே விவசாயிகளுக்காக பல தடவை கதைக்கிறார்கள் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உரையை விமர்சித்தும் கமக்கார அமைப்புக்களின் கூட்டத்தில் பல கருத்துக்கள் முன்னவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகாரசபையின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் தலைவர் அருளானந்தராஜா ரமேஷ் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இது ஒரு கண்துடைப்பு
''மட்டக்களப்பு மாவட்டத்தில் 190,000 ஏக்கர் பெரும்போகம் செய்யப்பட்ட இந்த பெரும்போக செய்கையில், அரசாங்கம் இன்று 4800 தொடக்கம் 5000 மெட்ரிக் தொன் நெல்லினியே கொள்முதல் செய்வதற்கு தயாராகியுள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு கிரான் பகுதியில் இந்த வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு கண்துடைப்பு. ஆனால் தற்பொழுது சராசரி விளைச்சலுக்கு 2.25 வீதமான நெல்லினை அதாவது 4275 ஏக்கர் உரிய நெல்லினினை அரசாங்கம் கொள்வனவு செய்யப் போகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு விவசாயியிடம் ஒரு மூடை நெல்லை கொள்வனவு செய்தாலே இந்த கொள்ளளவு வந்துவிடும்.
இவர்கள் எங்களை ஏமாற்றுகின்றார்கள். சேதன உரத்தினை பயன்படுத்தி மூன்று போகம் விவசாயத்தினை மேற்கொண்டு தோல்வி அடைந்திருக்கின்றோம். நான்காவது போகத்திலும் நாங்கள் அடிபடுவோமாக இருந்தால் வடக்கு கிழக்கு பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும்.வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல இலங்கை முழுவதிலும் இது ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் இன்று 95 வீதமான அறுவடை மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிவடைந்து இருக்கின்றது. இன்று நெல் கொள்முதல் தொடங்கி இருக்கின்றார்கள். இது உண்மையிலே எங்களை புறக்கணிக்கும் செயலாக நாங்கள் கருதுகின்றோம்.
சிவநேசதுரை சந்திரகாந்தன்
190,000 ஏக்கர் பெரும்போகம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது வருகின்ற விளைச்சலின் படி பார்த்தால் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 18 மூடைகள் பார்க்கலாம். அவ்வாறு பார்க்கும் பட்சத்தில் 275 தொடக்கம் 300 மெட்ரிக் தொன் நெல் உற்பத்தி ஆகின்றது.
வளமையில் நெல் கொள்வனவு என்பது நெல் சந்தைப்படுத்தல் சபை மூலமாக இடம்பெறுவது. ஆனால் இம்முறை அவர்களுக்குரிய வேலைகளை அவர்கள் செய்யாமல், பொருளாதாரப் பிரச்சினையை காரணம் காட்டி அவர்கள் பணத்தினை இலகுவாக திருப்பி பெறுவதற்காக சமூர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பதன் மூலமாக, வங்கிகளில் இருக்கும் பணத்தினை மீண்டும் இலகுவாக பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற ஒரு நடிப்புக்காக சமூர்த்தி பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர்களின் ஊடாக அரிசி வழங்குவதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
''கடந்த காலங்களில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பல உரைகளில் விவசாயிகள் மில்லியனர் பில்லியனர் ஆக மாறுவார்கள் என கூறியிருந்தார். தற்போது விவசாயிகள் இவ்வாறான சிக்கல்களுக்கு முகம் கொடுத்து இருக்கின்ற நிலையில் இந்தப் பிரச்சினைகளை அவருக்கு நீங்கள் எடுத்துக் கூறி இருக்கின்றீர்களா? அல்லது அந்த கருத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?'' என கேள்வி எழுப்பப்பட்டது.
நோய் தாக்கம்
இதற்கு பதிலளித்த அவர், “மட்டக்களப்பில் உள்ள 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்த கூறி விவசாயிகளாகிய நாங்கள் தொடர்பிலே இருக்கின்றோம். அதிலே ஐந்து பேரும் இதில் கவனம் எடுத்ததாக தெரியவில்லை.
இவற்றில் தமிழ்த் தேசியத்தில் இருக்கின்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்காக பல தடவை கதைத்து இருக்கின்றார்கள். ஆனால் ஆளும் கட்சியைச் சார்ந்த அமைச்சரோ ராஜாங்க அமைச்சர்களோ இந்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் நல்ல விடயங்களை செய்திருந்தாலும் அண்மைக்காலங்களில் இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.” என தெரிவித்தார்.
“கடந்த காலங்களில் வேளாண்மைகளில் மஞ்சள் நோய் ஆகிய நோய்த்தாக்கங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக அறுவடையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது? என வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “மஞ்சள் நோய் என்பது அரசாங்கத்தினால் பூசப்படுகின்ற பெயரே தவிர உண்மையிலே அது மஞ்சள் நோயை விட வேர் முடிச்சு நெமடோட் எனப்படுகின்ற நோய் தாக்கமே இது.
மஞ்சள் நோய்
அரசாங்கத்தினால் திட்டமிடல் கொள்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கூட்டெரு மூலம் பரப்பப்பட்ட ஒரு நோய். நாங்கள் இரண்டு ஏக்கர் வயல் நிலங்களில் சேதன உரத்தை பயன்படுத்திய செய்திருந்தோம். இந்த 2 ஏக்கர்களில் பரவிய அந்த நோயின் காரணமாக மேலும் 6 ஏக்கருக்கு இது பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தாக்கமானது இரண்டு மூன்று வருடங்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் எவ்வாறு தடுக்கும் என்கின்ற வழிகளை கூறாமல் புதிதாக மஞ்சள் நோய் என கூறுகின்றார்கள். நஞ்ஞற்ற உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என தொடங்கிய அரசாங்கம், அதன் விளைவு எவ்வாறு வந்தது என்றால் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதற்கு பதிலாக நஞ்சுள்ள உணவுகளை உற்பத்தி செய்வதற்காகவே வந்திருக்கின்றது.
அவமட்டின் எனப்படுகின்ற குருணல் நூறுவீதம் நஞ்சுள்ள குருணல் அதை போட்டுத்தான் இவற்றினை அழிக்கலாம். அதற்கு 65,000 ரூபாய் நாங்கள் செலவழிக்க வேண்டி இருக்கின்றது. தெரிந்தோ தெரியாமலோ அனைத்தையும் அரசாங்கம் பூசி மழுப்புகின்றது. தற்போது. அறுவடை குறைந்த அளவில் காணப்படுகிறது.
சில வயல்களை அறுவடை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. அறுவடை அரைவாசிக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இது இலங்கையில் அரிசி தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும். இதனால் தரகு வியாபாரம் செய்பவர்கள் இலகுவாக அரிசியை இறக்குமதி செய்துவிட்டு இருப்பார்கள் என கூறியிருந்தார்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
